செவ்வகக் கூண்டு

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை நீங்கியதில்ஏதொரு பதட்டமுமின்றித்தான்காற்றிலாடுகின்றன குண்டுக் கத்தரிக்காய்கள்புடலங்காயைப் பிரதியெடுத்ததில்குட்டையாகிப் போனதுகல் கட்டும் காய் மென்தோல் தக்காளிகள்வன்முறைக்கு மாறிவெகுநாட்களாயிற்று மெழுகிட்ட ஆப்பிள்ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டுகடித்துப் பார்க்கும் ஆசைகடவுளுக்கே வருகிறது ஒட்டுருவாக்கத்தில்குயில் முட்டையெனஆரஞ்சையும் ஏற்கிறதுமாமரம் வயலோரங்களில் குலுங்கிக் கிடந்தநினைவு மறந்துபாக்கெட்டுகளில் தஞ்சமடையத்தயாராகவே இருக்கின்றனஹைபிரிட்டில் சுட்ட பழங்கள் வெட்டி ஒட்டும் கலையில் தேறியசிற்றினம் ஒன்றின்மொத்த வாழ்வையும்செவ்வகத்துக்குள் அடக்கிச்சிரிக்கிறது இயற்கை

கோயில் காடுகள்

கோயில் காடுகள்

இயற்கையின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டுமாயின், மனிதர்களால் இயலக்கூடியது பசுமைப் பரப்பினை அதிகரிப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும்தான். அன்று முதல் இன்று வரை பசுமைப் பரப்பு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. கடந்த நூறாண்டு காலத்தில் தகவமைத்தல் என்பதைத் தாண்டி, அழித்தலில்தான் மனிதர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நமது முன்னோர்கள் நீர் மேலாண்மை, பாதுகாப்பு போன்றவற்றிற்காக, கோயில்கள்தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிக்கும் முறையினைப் பின்பற்றி வந்துள்ளனர். தமிழின் நீதி இலக்கியங்களில் ஒன்றான ‘சிறுபஞ்சமூலம்’ இயற்கையின் அறம் மற்றும் சூழலியல் நீதியையும் […]

முறிக்கப்படும் கொம்புகள்

முறிக்கப்படும் கொம்புகள்

உங்கள் அன்பு எப்போதும்நியாமானது உங்களுக்கு வீட்டுத்திரையில் பார்த்துநேரில் காண விரும்பி என் வீடு தேடி வருவீர்கள் இன்னும் அருகில் அருகில் பார்த்தாலும்உங்களுக்கு அலுப்புத் தட்டாது கூடாரம் அமைப்பீர்கள் ஒரே கூடாரம் உங்களுக்குஎப்போதுதான் போதும்? ஒன்று நூறாகும்போதுபோதும் என்று துதிக்கை உயர்த்துவேன் ஆனால் உங்களுக்குஎன் துதிக்கை கீழ்ப்படிதல்தானே பிடிக்கும் பயப்படாமல் என்னைப் புரிந்துகொள்ளலாம்ஆனால்அட்டகாசம் என்று செய்தித் தலைப்பிடுவீர்கள் தீயிட்டும் வெடி வைத்தும் துரத்தும்போதுஎனக்குக் கோபம் வராமல் இல்லை நானும் உங்களோடு பழகியவன்தானே? பின் திரும்பினால் என்னை விரட்டிஇன்னுமொருமுறை என் […]

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் […]

O2

O2

திரை விமர்சனம் ஆக்சிஜன்,  பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல,  எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை,  ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ்,  ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார். ‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி […]

பூமிகா

பூமிகா

திரை விமர்சனம் அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி.  இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த […]

நிலம், நிலமறிய ஆவல் – 20

நிலம், நிலமறிய ஆவல் – 20

ஏர்மங்கலம், இந்தப் பாடல் மருதநிலத்துக்கு மட்டுமே உரியது. பொன்னேர் பூட்டல் என்று முதன் முதலாக மருதத்தில் ஏர் பூட்டும் நிகழ்வைக் குறிப்பிடுவார்கள். அப்போது ஏர்கலப்பையை வைத்திருக்கும் உழவர் பெருமக்களால் பாடப்படும் பாடல் ஏர்மங்கலம் ஆகும். பொன்னேர் பூட்டல் நிகழ்வு பற்றி தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவாகும். இன்றும் கூட சில கிராமங்களில் பொன்னேர் பூட்டல் நிகழ்வு விமரிசையாக இல்லாவிடினும், பாரம்பர்ய நிகழ்வாக நடத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையிலும் பொன்னேர் […]

கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்!

கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்!

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. என்ற வள்ளுவர் குறளின்படி நாட்டின் வளர்ச்சியில் உழவர்கள் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார் வள்ளுவர். இன்றைய கார்ப்பரேட் காலகட்டத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே உணவு என்கிற சூழலை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையிலும் மற்றும் ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மானுடவியல் […]