ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் […]

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL […]

தலைகீழாகத்தான் குதிப்பேன்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 […]

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு நூலகம்போல் மாறியிருந்தது. வரவழைக்கப்பட்டப் புத்தகங்களில் ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம்’ என்ற நூல் இல்லை. பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற நூலைப் பெற்று அனுப்பிவைக்குமாறு ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தணியாத அறிவு தாகம் கொண்டிருந்த பகத்சிங். ‘ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் […]

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

முகப்புக் கட்டுரை நான் பணியில் இருந்தபோது சக பெண் தோழர்கள் வெளிநாடு போவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பார்கள். அது ஒரு பெரிய நடைமுறை. எல்லா மட்டங்களுக்கும் சென்று, காரண காரியங்கள் ஆராயப்பட்டு, மூன்று மாதம் கேட்டால் இரண்டு மாதம் விடுமுறை தருவார்கள். நாங்கள் சங்கத்தின் மூலம் போய்ப் பேசி, மூன்று மாதங்கள் வாங்கித் தருவோம். இதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நிறைய பேர் கனடாவிற்குச் செல்ல விண்ணப்பிப்பார்கள். இதன் பின்னால் உள்ள ரகசியம், பணி ஒய்வு […]

ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட […]

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றைப் பற்றிப் பொதுமக்களிடம் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்கேனும் அவை குறித்த அறிமுகமும் செய்திகளும் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு கல்வித்துறையில் செய்துவரும் பரவலான மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதல் பெரும்பாலான கல்வியாளர்களிடம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்பவை மாறாதவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் எதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்பதுதான் நம்முன் நிற்கும் முக்கியக் […]

கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, […]

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் […]

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை அன்போடும் வாஞ்சையோடும் நினைவு கூர்கிறது. அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ் ஊற்றுதான் அரசியல் வானில் விஸ்வரூபமாக எழுந்து நின்று, பேரறிஞர் அண்ணா என்று அனைவர் மனத்திலும் பதிய வைப்பதற்குக் காரணமாக இருந்தது. சொல் புதிது, பொருள் புதிது எனத் தமிழ் மொழியின் புதிய அடையாளமாகத் திகழ்ந்தார். மேடைத் தமிழுக்கு […]

வந்தே பாரத் வடை 

வந்தே பாரத் வடை 

நகைச்சுவைச் சிறுகதை குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை இல்லாத சுயசவர முகம். பூஜையறைக்கு வந்தார். அனுமன் விக்கிரகம் முன் வந்து நின்று, அனுமன் சாலீஸா மந்திரத்தை ஓத ஆரம்பித்தார். “ஜெய ஹனுமானே! ஞானக் குணக்கடலே!உலகத்தின் ஒளியே வானரர் கோனே!ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே…” தொடர்ந்து ஓதி முடித்தவுடன் […]

சந்திராயன் பயணத்தில்

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும் பார்க்கவில்லையெனஅவன் சொன்னதுஅதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்கஐந்து ரூபாய் வசூலிக்கும்சாலையோர உணவகங்கள்ஒன்றுகூடக் காணவில்லை எனசந்திராயன் சொன்னதுசரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்கஒரு கடவுள் கூடஉண்டியல் வைத்திருக்கவில்லைஎனச் சொன்னதுநம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும்சரியாக இருந்தும்போக்குவரத்து விதி மீறலெனப்போலீஸ் பிடிக்காததைசந்திராயன் சொல்லிச்சிரித்தான் செல்கிற வழிகளில்விண்வெளி இடங்களைவீட்டு மனைகளாக்கிவிலை பேசி விற்கரியல் எஸ்டேட்நிறுவனங்களின்அறிவிப்புப் பலகையைப்பார்க்காததுசந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம்அருந்திவிட்டுஉருண்டு புரண்டு கிடக்கும்எந்தப் பரமாத்மாக்களையும்தான் செல்லும் […]

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய […]

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே […]

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட […]

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட நகரங்கள் ஒரு நொடியில் பஸ்பமாக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது. லிட்டில் பாய் (Little Boy) மற்றும் ஃபேட் மேன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றில், மனித வரலாற்றில் முதல்முறையாக, போரில் […]

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் […]

நரகவாய் மோகன்

நரகவாய் மோகன்

அரசியல் நையாண்டிச் சிறுகதை ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ். “எங்க போறோம் பாலகணேஷ்?” மகன் மோகன்ராஜா வினவினான். தந்தையைப் பெயர் சொல்லிதான் அழைப்பான். சகமனிதர்களை, புழுக்களைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பான். வெண்கலக் குரல். “சும்மா இங்க பக்கத்துல என் பிரண்டு வீட்டுக்கு!” “பொய் சொல்ற. நீயும் உன் மனைவியும் பேசுறதை உங்க பெட்டுக்கு அடில படுத்திருந்து முழுசா ஒட்டுக் கேட்டுட்டேன்!” […]