வன்மம் களைந்த மெய்

வன்மம் களைந்த மெய்

கவிதைகள் மயில் குட்டி ஒளியை உள் வாங்கியமகிழ்வுந்தின் கண்ணாடியொன்றுகம்பி மயிலுக்குக் கதவு திறந்திடஅது கருக்கொண்டுவெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது அது கண்டுசிறு திடலென மேடு கண்டதன் வயிற்றில் குறுகுறுத்தகுட்டி மயிலை விரல் பூசிவண்ணம் செய்கிறாள்தோகதவதி வன்மம் களைந்த மெய் மொழி தவிர்த்த துக்கம்சில உடைந்துவெளிக்கொணராமல் இருக்கஇறுகிய குரல்வளைகயிற்றை அறுத்தெறியதேவையாக ஒருகுளியலறை கிட்டியது பொதுபொதுவெனக் கொட்டியநீர் தாங்கிய குழாயினைத்திறக்கும் ஓசையில்அடித்துச் செல்லப்பட்டவிழி நீரும்உடைந்த வார்த்தைகளும்‘ஓ’வெனச் சிதறியமன இரைச்சலும் மறுசுழற்சி செய்த பின்ஒரு குளிர் தேகம்வெற்றுடலுடன் கடந்து வருகிறதுவன்மத்தை வாழைக்காய்ப் படகோட்டி வியாழக்கிழமைச் […]

கரைசேராப் படகுகள் – 12

கரைசேராப் படகுகள் – 12

கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும்  கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை […]

கரைசேராப் படகுகள் – 11

கரைசேராப் படகுகள் – 11

களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பிய செந்தாமரை, “மரகதம், நாளைக்கு அரைவிடுதி வேலைதான் ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருக்கு; நீ காலைல கஞ்சியும் சேர்த்து எடுத்துட்டு வந்துடு. ஆளுங்க கோழிகூவயிலேயே வந்துருவாங்க” என்றார்.    “அய்யோ நாளைக்கும் கஞ்சி காய்ச்சணுமா? வீட்ல சொல்லிவிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்களே.. வேலை மெனக்கெடுமே” என்று புலம்பினாள் மரகதம். “விளைஞ்ச வெள்ளாமை வீடு வர வேணாமா? மேலு அலுப்ப பார்த்தா முடியுமா?” “நான் கஞ்சி காய்ச்சிடறேன் மாமோய்.. சத்த அந்தக் கஞ்சி அண்டாவ, மாரிய விட்டு தூக்கிப் […]

கரைசேராப் படகுகள் – 10

கரைசேராப் படகுகள் – 10

தொடர்கதைவயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை. “எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை. கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  […]

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, […]

கரைசேராப் படகுகள் – 8

கரைசேராப் படகுகள் – 8

தொடர்கதை சேதி  சொல்லப்  போன மனுஷன்  வெள்ளையத்தேவன் மாதிரி  வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம். “மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான்   மாணிக்கம். ‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு  பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய்  மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள்  பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சரி… சரி… வெளக்கு […]

கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் […]

கரைசேராப் படகுகள் – 6

கரைசேராப் படகுகள் – 6

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார். “அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு, “டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார். “அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன […]

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட […]

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று […]

கரைசேராப் படகுகள் – 3

கரைசேராப் படகுகள் – 3

தொடர்கதை மனிதன் பிறக்கும்போதே பல உறவுகளுடன்தான் பிறக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கோ பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும்  இணைகின்றனர். வெறும் மஞ்சள் கயிறும் மோதிரமும் மட்டுமா  இருவரையும் இணைக்கிறது?! அவை வெறும் அடையாளம் மட்டுமே. கணவன் – மனைவி உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம், நம்பிக்கை இருப்பவர்களுக்கு; இந்த ஜென்மத்து சொர்க்கம் அன்பு இருப்பவர்களுக்கு. பிரசவம் முடிந்த மறுநொடியில், பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல், கணவனைத் தேடுகிறாள் என்றால், […]

கரைசேராப் படகுகள் 2

கரைசேராப் படகுகள் 2

தொடர்கதை வாழ்க்கை , எந்தத் துன்பமும் இல்லாமல்  மகிழ்ச்சியாகச் செல்லும்வரை  மனிதனுக்கு  தான்தான்  பெரிய சக்தி என்ற எண்ணம். கொஞ்சம் துன்பம் தலை தூக்கும்போதுதான்  தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான்; அதையும்  மதங்களில் தேடுகிறான்; மனித மனங்களை விட்டுவிட்டான்.  புனிதாவின்  அலறல் ஓலம் , ஈரக்குலையே  வாய்வழியே  வந்துவிடும் அளவிற்கு  வெளியில்  இருப்பவர்களுக்கு  வேதனையளித்தது. பெண்கள் உள்ளே போகலாம் என்று நினைத்தால், வெளியே திண்ணையில்  பெருசுகள் இருக்கிறார்கள். அவர்களை மீறிப் போனால் மரியாதையாக இருக்காது என்று வாசல் […]

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் […]