கரைசேராப் படகுகள் – 12
கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும் கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை […]