பொன்னியின் செல்வன் – Ps 25

பொன்னியின் செல்வன் – Ps 25

தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம். நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.அப்போது மணிமேகலை உள்ளே வர […]

பொன்னியின் செல்வன் – 21

பொன்னியின் செல்வன் – 21

ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்த நிமிடம் முதல் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சம்புவரையரும், பழுவேட்டரையரும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தார்கள். அவனிடம் பேசுவதற்கே அவர்கள் பயந்து தயங்கியிருந்த பொழுதில்ஆதித்த கரிகாலனே அவர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தான்.மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சுந்தரசோழர் முடிவெடுத்திருப்பதாகவும், அதைப்பற்றிய சிற்றரசர்களின் அபிப்ராயம் என்னவென தெரிந்து கொண்டு, தான் முடிவெடுக்க இருப்பதாக நயந்து கூறினான். பழுவேட்டரையர் அதை நம்பி விட்டார்.உடனே நந்தினியின் திட்டமான நாட்டை பிரித்து கொடுக்கும் யோசனையைக் கூற கரிகாலன் வெகுண்டான்.‘கிழவர்களாகிய […]

பொன்னியின் செல்வன் – 19

பொன்னியின் செல்வன் – 19

நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் […]

பொன்னியின் செல்வன் – 18

பொன்னியின் செல்வன் – 18

குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.‘ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும் வந்தியத்தேவனை தடுக்க வேண்டும்..அவனை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று ரவிதாசன் நந்தினியிடம் சொல்லி வந்தியத் தேவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.நந்தினியும் அவன் தங்களோடு சேர்ந்து விடும்படி மீண்டும் கூறினாள்..வந்தியத் தேவன் மறுக்கவே ரவிதாசன் அவனை கொன்று விடலாம் என்றான்..நந்தினியோ அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போய் விடலாம் […]

பொன்னியின் செல்வன் – 9

பொன்னியின் செல்வன் – 9

பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  பீஷ்மரை […]

பொன்னியின் செல்வன் – 8

பொன்னியின் செல்வன் – 8

ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது.  ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் […]

பொன்னியின் செல்வன் – 6

பொன்னியின் செல்வன் – 6

கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் […]

பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய […]

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். […]