ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, […]

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் […]

தடங்கள்

தடங்கள்

சுவடு வாசகர்களுக்கு வணக்கம். கடந்த ஜூன் மாதத்தில் சுவடு இணைய இதழ் புதுப் பாய்ச்சலைத் தொடங்கிய பிறகு, நீங்கள் காட்டும் பேராதரவிற்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை. இந்தச் சிறப்பு உங்களால் வந்தது. வாரந்தோறும் இந்தப் பகுதியில், முந்தைய வாரத்தில் வாசகர்கள் மனத்தில் சுவடு பதித்திருக்கும் தட ங்களை, வாசகர்களிடமே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் வாசகர்கள் எண்ணங்களை அலசவும் அவர்களின் புதிய யோசனைகளை அறிந்து செயல்படுத்துவதற்காகவும் ஒரு வாசலைத திறந்து வைக்கிறோம். ஜூன் மாதத்திலிருந்தே சுதர்சனம்.E.S. அவர்களும் ம.செ. மோகன் ராஜா […]

யாவரும் கேளிர்?!

யாவரும் கேளிர்?!

சிறுகதை “குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?” கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி. “ரொம்பத்தான் அக்கறை.. மில்லுக்குப் போனா குடும்பத்தை மறக்கற ஆளு.. என்னைய சொல்லாதீங்க. எல்லாம் என்னோட கிரகம். அப்புறம் பேசி என்ன பிரயோசனம்..” பதிலுக்குப் பொருமினார் மங்களம். “அடேங்கப்பா! கரடிவாவிகாரிக்கு வாயப்பாரு.. உன்கிட்ட போட்டி போட முடியுமா? ஊருக்குள்ள நடக்கிற அத்தன கூட்டத்துலையும் பேச்சால துவம்சம் செய்யும் எனக்கு, வீட்ல நேர் எதிர்தா போ..” என்று, […]

வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு […]

தவி:ப்பு

தவி:ப்பு

ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு  சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இறங்கியபடி பலர் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த இருண்ட பாதாள வளிமண்டல அறைக்குள் நுழையும்போது, நீண்ட அறையெங்கும் எதிரொலிக்கும்படி கணினி ஒலிப்பெருக்கியின் குரல். “விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், இன்னும் எட்டு நிமிடங்களில் முதலாம்  நடை மேடையில் வந்தடையும்“ என்று அறிவிப்பு ஒலிக்கிறது. தற்போது ரயில்வே நேரப்படி மணி 14:45. மேற்கூரையிலிருந்து தொங்கும் ஒளித்திரை அறிவிப்பு, […]

நாற்பத்தேழு

நாற்பத்தேழு

1947 எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு யுத்த மகள் என்பார்கள் என்னை பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ளஆலை அதிபர்களுக்கும் பண்ணையார்களுக்கும்கொள்ளை ஆசை 1948 எனக்கும் வயதாகிவிட்டதுபிறக்கும்போது சவலைப் பிள்ளையாக இருந்தாலும்இப்போது கொழுத்துத் திரிகிறேன்இப்போதெனக்குத் தோழர்கள் அதிகம்என்னை அன்று சவலை ஆக்கமுயன்றவர்களை எல்லாம்இல்லாமல் ஆக்கியோஅல்லது கூட்டாளி ஆக்கியோநான் ஊதி இருக்கிறேன் 1950 நான் நாற்பத்தேழுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இளையவள்தான்என்னை ஜனநாயகத்தின் மகள் என்றார்கள்சமதர்மத்தின் தங்கை என்றும் சொல்லி மகிழந்தார்கள்நானும் – என்னைக் கொஞ்சியகோடானுகோடி பங்காளிகளும்பூரித்துப் […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி […]

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி […]

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் […]

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான […]

ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்

ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அனல் பறக்கும் எனில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டிகளில் தீப்பற்றி எரியும். மக்களுடன் சேர்ந்து அந்தந்த நாட்டின் தலைவர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்கள். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கிரிக்கெட்டின் தலைமையிடமான லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றபோது, அப்படிப் பல அனல் துளிகள் பறந்தன. இங்கிலாந்தின் பேர்ஸ்டோ அவுட் ஆக்கப்பட்ட விதம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிக்கை […]

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த […]

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் […]

தேரி

தேரி

நூல் விமர்சனம் தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன. திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களின் மணற்பரப்பின் பொதுப் பெயர் தேரி.கடற்கரை மணலும் தேரி. சற்று உள்ளே வநதால் தாமிரபரணிக் கரைச் சரிவின் செம்மாந்த மணலும் தேரி. மணப்பாடு தாண்டியவுடன் கடலோரச் சாலையில் விரிந்து சிவந்திருக்கும் மணற்பரப்பும் தேரி. நெய்தலாயினும் மருதமாயினும் இரண்டுக்கும் இடையிலான இந்தத் தேரியானாலும் வளர்ச்சி […]

வேர்

வேர்

சிறுகதை ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று பள்ளிக்காலத்தில் கிடைத்தது. இப்போது இருக்கும் வாந்தி மாத்திரைகள் இல்லாத காலம். எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்து பசுமையை அதற்குண்டான இளம் சாரளைக் கொண்டு நகர்த்திய நாள் அது. சுமை என்ற ஒன்று இல்லாத காலம் இருந்ததில்லை அப்பாவிற்கு. ‘அவளுக்கு இல்லாம என்ன?’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் […]

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு […]

பின்னப்பட்ட எண்ணங்கள்

பின்னப்பட்ட எண்ணங்கள்

நிகழ்வுகளின் நெளிவுசுழிவுகள்மூளைக்குள் பின்னப்பட்டுசொற்களாய் உருமாறிஇதழ்வழி உதிருமெனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்நீருக்குள் புதைக்கப்பட்டமீள் ஒலியாய்குமிழ்களாகவே வெளிப்பட்டுகாற்றில் காணாமல் போகின்றன ரணங்களுக்கு மருந்திடாக் காலம்பின்னப்பட்ட எண்ணங்களைச்சுமந்திருக்கும் சுவர்களுக்குத்தலைகோதிவிட கைகளைத் தராததுஜென்ம சாபல்யம் என்றேஅதன்மீது ஊர்ந்து செல்லும் சிலந்திபரிதாபமுரைத்துச் செல்கிறது நிலவின் கறைகள் போலஆண்டாண்டாய் உள்ளூறக் குமைந்துநிஜத்தைப் பொலிவிழக்கச் செய்யும்நஞ்சூறிய சொற்களை உதிர்த்துஎம்மனதையும் மரணிக்கச் செய்திடாதுஅச்சுவர்களைத் தவிக்கவிட்டுப் பறந்ததுபெருமூச்சொன்று பேரண்டம் தேடி