தியானம்!

தியானம்!

உன் முதல் சிரிப்பையும் முதல் அழுகையையும் ரசித்த முதல் ரசிகன் நான்!.. நித்தம் உந்தன் நினைவலையில் நீர்த்துப் போனேன் நிராயுதபாணியாய்!.. சங்குவலை கழுத்தில் சாய்ந்தாட சஞ்சிகை அவதாரம் காண்பேனோ சயனநிலையில்!.. அணிகளைந்து ஆடைகளைந்து நித்தம் எஞ்சுவதை நோக்கி ஏங்கித் திகைப்பேனா!.. கால்பிணைத்து கட்டியணைத்து காயம் பேசிடும் ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை… அள்ளியெடுத்து பொங்கும் அன்பின் நுரைசொல்ல முடியா உணர்வுகளை சொல்லிவிடத் துடிக்கும் தேகத்தின் தியானம்!.. ஈருருளியில் நீண்ட பயணம்மரமில்லா பொட்டல் சாலைநிழலைத் தேடும் மரவியாபாரி!

அவதானம்!

அவதானம்!

மலரிடை கொடியிடையாள் மனமதில் குடியுடையாள் தேகத்தின் ஆர்ப்பரிப்பில் தேன்பருகிட துகிலுரித்தாள் கள்வனும் கணவனாய் காத்திருப்பில் அவதானம்!..

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

பசுமைக் குடை பிடித்து, பகலவன் கதிர் தடுத்து, பனி கூட உருகாமல் பகலையும் குளிராக்குவேன். பசிக்கு உணவு தந்து, புசிக்கும் பழங்கள் தந்து, ருசிக்கும் எல்லாம் தந்து, தவிக்கும் நோய்க்கு மருந்தாம் மூலிகை தருவேன். காடுகரை வளர்த்து கழனி  செழிக்க கார்மேகம் தடுத்து, கண்மாய் நிறைக்கும் கனமழை தருவேன். வீட்டிற்கு நிலைக்கதவாக, விலங்கிற்கும் இரையாக, விளைச்சல் தரும் பயிராக, விறகாக, நீ வெட்டியெடுக்கும் கட்டித்தங்கம் நிலக்கரியாக, இலையாகத்  தழையாக, உரமாக, மரமாக, நீ, உயிர் வாழ உள்ளிழுக்கும் […]

காற்றே…

காற்றே…

உருவம் இன்றி அலைந்து திரியும்என்னுயிர் காற்றே …நீ …..விரைந்திடும் வழியில்புரிந்திடும் திருவிளையாடல் கோடி பார்வை இன்றிஎன் திசை அறிந்துபாய்ந்து வருகிறாய்பாசம் கொண்ட தலைவன் போலபாசாங்கு செய்கிறாய்…. கால்கள் இன்றிகடக்கும் பாதையில்காவல் நிற்கிறாய்காதல் கொண்ட தலைவனாய்கவிதை சொல்கிறாய்…… கைகள் இன்றிகன்னம் வைத்து களவு செய்கிறாய்கள்ளம் கொண்ட காதலனின்கைவிரல் போலகளைந்த என் ஆடையினில்வேவு பார்க்கிறாய்……. ஆவல் கொண்டுஉன்னைப் பற்ற கைகள் நீட்டினேன்தேடல் கண்டு மகிழமறைந்து அரூபமாகிறாய் ஊடல் கொள்ள எண்ணிஎன்னை உரசிப் பார்க்கிறாய்நாடல் கொண்டநங்கை மனம் நயந்து போகாமல்பாடல் கொள்ளும் […]

வீடு இழத்தல்

பழைய வீட்டின் லட்சுமிமூலையில் தகரஸ்டாண்டில் வைத்து தினந்தோறும் துடைத்து சூடம் காட்டி வெள்ளிக் கிழமைகளில் பூச்சரம் சார்த்தி புதுவீடுகட்ட பூமி பூசை நாளில் என்னையே வணங்கி நின்றாய். வீட்டை இடிக்கையில் எங்கள் சாமியென்று வேலியோரம் பத்திரப்படுத்தினாய். வேலிமாற்றி மதில்சுவராகும்போது தெருமுக்கில் விநாயகர் மேடையோரம் இடம் பெயர்த்தாய். வீடுகட்டி முடிந்து புரோகிதன் பட்டியலிட்ட புதுச்சாமிப் படமொன்றுடன் புதுவீட்டில் நீ குடியேற கைதொழ நாதியற்றுப்போன சாமியானேன் நான் தெருமுனையில். உனக்கென்ன ராசா … புது வீடு புதுச் சாமி. வீடிழந்தவன் […]

இருந்தும் இல்லாதது…

இருந்தும் இல்லாதது…

வட்டிக்கடையில் உப்புப்படிந்தகட்டுக்கட்டான பணத்தை‘எண்ண’ முடியாமல் எண்ணிகஜானாவில் நிரப்பும்ஏழை கணக்கப்பிள்ளை! ஒவ்வொரு ஞாயிறும்அறுநூறு கிலோ கறியைஅறுத்து அளந்துபோட்டுவிட்டுஒரு துண்டு இறைச்சிக்காகஒரு திருமண அழைப்பின்தேதியினை அன்றாடம்மனக் காலண்டரில் கிழிக்கும்கசாப்புக்கடைச் சிப்பந்தி! வண்ணங்களின் குழைவுகளில்தோய்ந்த தூரிகையைப்போல்கனவு ஓவியங்களைத் தீட்டிகலர் கலர் பொம்மைகளோடுபுழுங்கிப் பொறாமையில் தவிக்கும்புடவைக் கடை பெண்! மூக்கைத் துளைக்கும் மசாலா –நாக்கைத் தூண்டும் பதார்த்தம்..வயிற்றைக் கொல்லும் எதார்த்தம்!எஞ்சிய எச்சில் தட்டுகளைஎப்போதும் ஏந்திச் செல்லும்புலனடக்கம் அறியாபுலம் பெயர்ந்த சிறுபிள்ளை! இவர்கள் எல்லோரை விடவும்இரவு வயிற்றுக்கு ஒன்றுமில்லாமல்முழங்கையைத் தலையணையாக்கிமுடங்கி தூங்கப்போகும் அந்தமூடைத் தூக்கும் தொழிலாளிஒருவகையில் […]

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

நாடற்றவர்களா இவர்கள்..? இல்லை. இந்த நாட்டின் முதுகெலும்புகள். நாதியற்றவர்களா இவர்கள்..? இல்லை . இந்த நாட்டின் இரத்தமும் சதையுமானவர்கள். இவர்கள் இல்லையேல் உங்கள் இந்தியா ஏது.‌? ஆனால்- செருப்பாய் தேய்ந்து இந்த தேசத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களை தேய்ந்த செருப்பாய் எண்ணி தெருவில் வீசி எறிந்து விட்டதே இந்த அரசுகள் . காரணமென்ன..? பெருமுதலாளிகளின் எடுபிடிகளான அரசுகள் இந்த உழைக்கும் மக்களை ஊர் கொண்டு போய் சேர்த்தால் கார்ப்பரேட்டுகளின் கரன்சி பசிக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் காரணம் கூறாமல் […]