பாதி ஆப்பிள் விளைவு
காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் […]