உள்ளங்கையின் இதயரேகையை
விரல்முனைகள் நான்கும் அழுத்த
ஒலிவாங்கிமுன் விரைப்புடன்
பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்
ஏதோவொரு ஏகார ஓசையில்
வந்துத் தொலைக்கும்
கொட்டாவியை எப்படித் தடுப்பது?!
சுதேசி கோஷத்துடன்
பரிந்துரைக்கப்பட்டதால்
251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்
எனக்கான செல்போன்
தயாராகிவிட்டிருக்குமா?!
பேரிடரில் பிழைத்தவர்கள்
அளித்த கொடையில்
பிழைப்பு நடத்தியவர் யாரோ?!
உலகப் பணக்காரர்களின்
வரிசைக் கோடுகளை
பரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கி
விளையாடும் கபடிக் குழுவில்
எனக்கும் இடம் கிடைக்குமா?!
சற்றுப் பொறுங்கள்
தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்
ஆளுங்கட்சியில்
ஐக்கியமாகிவிடுகிறேன்
- ப்ரியா வெங்கடேசன்

GOMATHI SANKAR RAMANATHAN
June 23, 2023அருமை..