சுவடு கடந்து வந்த பாதை

2007 சனவரியில் ‘சுவடு’ மாத இதழ் வெளிவந்தது. ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும்போது ஏற்படும் வலியையும் துன்பத்தையும் எப்படிப் பொறுத்துக்கொண்டு பெற்றெடுக்கிறாளோ, அப்படியே ‘சுவடு’வும் மாத இதழாகப் பிரசவமானது.

ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க ஏகாதிபத்திய அரசால் தூக்கிட்டுக் கொல்லப் பட்டபோது… மனித இனமே அழுதது; அந்த ஒளிப்பட அட்டையுடன் 2007 சனவரியில் சுவடு வெளிவந்த நினைவு உள்ளத்தில் அழியாச்சுவடாகப் பதிந்துள்ளது.

2007 சனவரி முதல் 2012 டிசம்பர் வரை தொடர்ந்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து ‘சுவடு’ ஒவ்வொரு மாதமும் வெளிவந்தாலும் நினைத்த இலக்கை அடையாமல் முடிவாகிப் போனது!

மீண்டும் மின்னிதழாக இம்மாதம் ஜூனில் நண்பர்கள் பவா சமத்துவன், மணியன் கலியமூர்த்தி, நல்லு இரா.லிங்கம், தமிழன் இளங்கோ, எம்.செய்யது முகம்மது ஆஸாத் ஆகியோருடைய உதவியால் உங்கள் கரங்களில் சுவடு தவழ்வதுகண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  மானுடத்தின் பாதையில் சுவடு தொடர்ந்து தடம் பதிக்கும். உங்கள் ஆதரவோடு!

நன்றியுடன்,

சா. அஹமது மன்சூர்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *