உன்னதம் இலக்கிய விழா
எழுத்தாளரும் ஆலா இலக்கியச் செயலி நிறுவனரும் டிஹேஷ் கண்டுபிடிப்பாளருமான கௌதம சித்தார்த்தன் தன்னுடைய பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு இலக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நூல் வெளியீடு, நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமர்வுகள் இடம்பெறுகின்றன.
முற்பகல் அமர்வில், கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள காலப்பயண அரசியல் நூல் வெளியீடும், இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை? நூல் அறிமுகமும் பார்வையாளர்கள் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. பிற்பகல் அமர்வில், மொழிபெயர்ப்பாளர் ஏ. வி. தனுஷ்கோடி அவர்களின் உருவப்படத் திறப்பு (ஓவியம்: சுந்தரன்), அவருடைய விசாரணை நாவல் வாசிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் குதிரைவால் படக் கதாசிரியர் ராஜேஷ், துறையூர் சரவணன், கவிஞர் மனுஷி, மொழிபெயர்ப்பாளர் எஸ். பாலச்சந்திரன், ஓவியர் சுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள்.
நிகழ்விடம்:
நியூ டெக் எஜுகேசன் சென்டர்,
காளிங்கராயன் பாளையம்,
சங்கமேஸ்வரர் கோயில் அருகில்,
பவானி.
நாள்: 17.09.2022 சனிக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை
தொடர்புக்கு:
9976951585,9500384307,9940786278 
Comments (0)