விதி

ஓங்கி உயர்ந்த மரத்தில்
இலைகளும் கிளைகளும்
பறவைக் கூடும் பான்பராக் கறையும்
பட்டைமேல் படர்ந்திருந்தன

இலைகள் விழ விழ
மரம் தளர்ந்து
மனநோயாளி ஆகவில்லை
அவ்வப்போது
பருவநிலை மாற்றத்தில்
சில நாள் நிர்வாணமும்
பல நாள்
வழிந்தொழுகும் மேகமுமாய்
அனிச்சை நிகழ்வாகின

சில சமயம்
கிளைகளில் சுளுக்கிருக்கும்
அதற்கு யாரோ எறிந்த
குப்பை மூட்டையும்
காரணமாய் இருக்கலாம்
கால தாமத வானிலை அறிக்கையால்
பல நேரம் காற்றும் கற்பழிக்கும்

பூச்சிகளும் எறும்புகளும்
குகையாய் மாற்றிக்கொள்ளும்
வருடத்தில் என்றேனும்
நேரமிருப்பின்
மழையும் கொஞ்சம் முத்தமிடும்
தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்
இவை சலிப்பு தந்து தித்திக்கும்

அவ்வப்போது
உடலில் வலியும்
முதுகுத்தண்டில் விரிசலும்
என்றோ விழுந்த மின்னலில்
உச்சந்தலைக் கருகலும்
இவை ஏன் எனக்கு மட்டும் என
கேட்கத் தோன்றும்

விழும் இலைக்கும்
முறியும் தண்டுக்கும்
விதிகள் ஏதுமில்லை
இயற்கையிலனைத்தும்
மாற்றமெடுப்பவையே

விதியின் ஓட்டத்தில் நிகழ்ந்தவை
எல்லாம் இயற்கையே
காய்ந்து விழுந்த இலைக்காக
மரம் மரிக்கவில்லை

ஓங்கிக் குட்டிய மின்னலுக்கும்
நெடுக வளர்ந்த மரத்திற்கும்
முன்பகை ஏதுமில்லை
நிகழ்வுகள் நிச்சயமாயின்
எவர் மீதும் பழி வீண்

  • அமாசே

Comments (9)


magimai

ஆசிரியருக்கு மிக்க நன்றிகள். இது போன்ற ஊக்குவிப்புகள் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும்.

Mahalakshmi
Mahalakshmi
June 8, 2023

Excellent write up xavier. Congratulations! Wish you many more laurels.

magimai

நனிநன்றிகள் மேடம்

Kasthuriba
Kasthuriba
June 8, 2023

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மகி
மரங்களின் உரையாடல் ஏதோ ஒருவித நெருடலை ஏற்படுத்தும்

magimai

மிக்க நன்றிகள் மேடம்

Sudhakar

Superbbbb ji

Vennila

Very nice Anna

Pushparaj
Pushparaj
June 9, 2023

Nice lines

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

காய்ந்து விழுந்த இலைக்காக
மரம் மரிக்கவில்லை👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *