சூட்சுமங்கள்
எப்போதும்போல எதுவுமில்லாதவர்
ஏமாந்தே எலும்பாகிறார்
எல்லாமுடையவர்
வசதியோடு வள்ளலாகிறார்
தெய்வமும் கைவசமிருப்பதைக்
கொடுத்துதான் நிற்கிறது
தன் இருப்பிடத்தில்
கட்டணமென்றால் சிறப்பு தரிசனத்தில் வரம்
கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்ற
சுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்
தெரிவதில்லை பாவம்
தெய்வங்களுக்கும் தெருக்கோடிகளுக்கும்
- கலை
Comments (0)