கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக் கிளப்பி வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று கருதி, அந்தப் பக்கத்திற்குச் சென்று கதையை வாசித்தேன். மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே உறவு உண்டாகி, மருமகனின் பிள்ளைக்குத் தாயாகிவிடுகிறார் மாமியார். தொடக்கத்தில் இருவரையும் கண்டிக்கும் மகள், கதையின் இறுதிக்காட்சியில் இந்த உறவு தந்தைக்குத் தெரியாமல் மறைப்பதை, அந்த உறவுக்கான இசைவு எனக் […]