தூரத்தில் இல்லை
கவிதை நீ மனிதன்நீதான் இவ்வுலகம்நீதான் அனைத்தும் செய்தாய் நீதான் வெற்று நிலத்தினைப் பசுமை செய்தாய்நீதான் இரும்பை உருக்கி ஆயுதம் செய்தாய்நீதான் அவர்களுக்குக் கொடுவாள் கொடுத்தாய்நீதான் எல்லாமுமாக நின்றாய் ஆனால்நீதான் அடிமைப்பட்டாய் உறுதியான மனத்தை எங்கோ தொலைத்துநீதான் இங்கு கீழானவன் ஆனாய் அதனால்தான் அவர்கள் உன் நிர்வாணம் பார்க்கின்றனர் அது அவர்களது புத்திஅவர்களின் கடவுள்களும் அப்படித்தான் அதனால்தான் உன்னுள் அவர்கள் அதனைத் தேடுகிறார்கள் நீ மறந்துவிட்டாய் நீதான் அவர்களுக்குபுதிய புதிய செருப்புகள் செய்து கொடுத்தாய்அதனையும் அவர்கள் தேய்த்துதூரம் வீசியிருப்பார்கள் எப்போது நீ அவர்கள் தூக்கி வீசிய செருப்புகளை எடுத்துஅவர்களின் தலைமேல் சாமரம் வீசப்போகிறாய்? சல்லடை சல்லடையாகச் சந்து வைத்து உன்னை அவர்கள் பிரித்து வைத்துள்ளதை எப்போது நீ அறிந்துகொள்ளப் போகிறாய் ? உன்னிடம் உறுதியான கைகள் இருக்கின்றனஆனால்உறுதி குலைந்த உன் மனத்தைஎப்போது திடம் செய்யப் போகிறாய்? அவர்கள் கொஞ்சம்நீதான் அதிகம்ஏன் அடிமைப்பட்டிருக்கிறாய்? எழுந்து நில்அப்போது பார்அவர்களின் சாம்ராஜ்யம் சுக்கு நூறாகச் சிதறிப் போகும் ஆமாம்அந்த நாள்தூரத்தில் இல்லை