கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும் ஓடி வருகிறதுமலையடிவாரம் கடந்தநதியொன்று சலசலப்புடன் பாடும் பறவை இரண்டைத்தாங்கியே நிற்கிறதுஅசை ஒலியெழுப்பியாய்படபடத்த இலை மரப்பச்சை நதி மணலில் கால்த் தடம் பதித்துஅருகில் குடில் சென்றுதிண்ணையில் குரைக்கின்றநாயின் சிறு பாதம் சுற்றுகிறது பின், வானம் பார்த்துஊர்க்குருவிகள்எங்கே போகின்றன கூட்டமாய்?எனக் கேட்டவாறுநண்பருடன் மிகை நயம் பேசும்போதே பெயரற்றுத் தொடரும் என்றேவரைந்துவிடுகிறான் அடிக்குறிப்பை அப்படியென்றால் பேசியதெல்லாம்கோடுகளும் நிறங்களும்கடந்து வந்த எண்ணமும்கற்பனையின் கதைகளுமா? பேசும் படம்அடுத்து வண்ணமேற்றிக்கொண்டிருக்கிறதுஓவியத்தின் கதைக்காக