சுண்டிய குடலின் வாசம்
கங்குகளில் தெறிக்கும்அனலைக் குடித்துசிவப்பேறி வெந்து தணிந்தசூளையிலிட்ட செங்கல்களில்கொடும் பசியில் கொதித்துச்சுண்டிய குடலின் வாசம்பூத்துக் கிடக்கும் மணிக்கணக்காய்மூச்சடக்கி மிதித்தெடுக்கும்களிமண்ணின் பதத்தைகொப்புளங்கள் வெடித்துரணங்கூட்டி வதைக்கும் பாதங்கள்முணுமுணுத்துச் சொல்லும் வாங்கிய முன்பணத்துக்காய்இளைத்துப்போனவாங்காத கூலியில்வெந்தது வேகாததுகணக்கில் தப்பியதென்றுசேதாரம் போகஅதிகாரங்களின் அத்தனை நரித்தனத்துக்கும்ஈடு சொல்லி வீடு வந்துசேர்ந்த பணம்பொழுதுக்கும் கும்பி நிறைக்கும்டீக்கடை பாக்கிக்கும்மூட்டுவலி தைலத்துக்குமாய்மூச்சுமுட்டி நிற்கும் காலங்காலமாய் கல்லறுத்த பிழைப்பில்முடமாகிப்போன காலும்சவமாகிப்போன கண்ணுமாய்தலைமுறை தாண்டியும்தலையெழுத்து சிரிக்கும்குடிசையின் அக்னிமூலை உயிர்ப்புசூளையின் தனலோடும்வெறிக்கும் வெய்யிலோடும்ஊசலாடிக் கிடக்கும் சாமம் தாண்டியும்சாளரங்கட்டும் பச்சைக் கல்லோடுகூட்டிக் கழித்துப் பார்க்கும்கந்துவட்டிக் கணக்குபொறையோடும் டீயோடும்பசித்த வயிறைப்புறத்தே தள்ளும் அடக்கிவைத்த சிறுநீரின்அடிவயிற்றுக் குத்தலாய்தேக்கி வைத்தவெசனமெல்லாம்தேகத்தை மென்று தின்னும் ஆண்டுக்கொருமுறைஅய்யனாரு பூசையில்குறை சொல்லிமுறையிட்டு நிற்கதை பிறந்தால்வழி பிறக்குமென்றுகுறி சொல்லும்பூசாரியின் வாக்கில்விடியாத நாட்களின்நுகராத வெளிச்சம்கைசேராக் கனவுகளில்இளைப்பாறியே களைக்கும் -அன்புமணிவேல்