தேநீர் அழைப்பு
ஒரு தேநீரை எப்படிக் குடிப்பது?தேநீருக்குள்ளிருந்து மேலெழும் ஆவியைசில நிமிடங்களாவது பார்க்க வேண்டும் ;என்னுடன் பேசும்உன் விரகங்களுக்குஇதே வண்ணம்இதே சூடுதான் ; தேநீருக்குள் பிஸ்கட்டைநனைக்கும் போதுநிகழ்காலத்தின் பெருவெளியில்நம்மை ஒப்படைத்திருக்க வேண்டும்.அது நண்பனின் மனைவியைபொது இடத்தில் அணைப்பது மாதிரிசடாரென்று விலகி விட வேண்டும் ; என் ஆசைகளின் நிறம்உன் கன்னத்திற்குசிவப்பாய் கடத்தப்பட்டிருப்பதைப் போலதேநீரின் சூடு கோப்பைக்கு வந்திருக்கும்;கோபத்தில் திரும்பியிருக்கும்முகத்தை மெல்லத் திருப்புவதைப் போலஅந்தக் கோப்பையைக்கையாள வேண்டும்; எடுத்த உடனே குடித்துவிடக் கூடாது.முத்தமிடுவதற்கு முன்முகத்தை உற்றுப் பார்ப்பதைப் போல்நீ மொத்த உலகத்தையும்பார்த்தாக வேண்டும்;நாசியில் ஏறிய தேநீரின் நறுமணத்தைமல்லிகையின் நெடியெனஉயிருக்குள் பத்திரப்படுத்த வேண்டும்; முதல் மிடறைக் குடித்த உடனேபாராட்டி விடக் கூடாது.அதுமுதல் முத்தம் முடிந்த உடனேபேசுவதற்கு நிகரானது ; கோப்பையைஅவ்வப்போது கீழே வைக்க வேண்டும்.‘போடா ‘என்றுதள்ளி விட்டபடியேசாய்வதைப் போல்கீழே வைத்திருக்கும் போதும்விரல்கள் கோப்பையில்இருக்க வேண்டும்; யாருடனாவது பேசிக் கொண்டேதேநீர் பருகும் போதுஉன்னை ஒரு கையால் அணைத்தபடியேஅலுவலக வேலைகளைகணிணியில் பார்ப்பதைநினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்; தேநீர்ச் சூடு ஆறுவதற்குள்குடித்து முடித்திருக்க வேண்டும்;தேநீரைச் சுவைப்பதுஓட்டப்பந்தயமோகலவியோஅல்ல.இரண்டுக்கும் இடைப்பட்டஆழமான முத்தம் ; கோப்பை கையிலிருக்கும் போதுதட்டு காலியாகத்தான்இருக்கும்.உன்னை மடியில் போட்டிருக்கும் போதுஅநாதையாய்ச் சிணுங்கும்தொலைபேசி அழைப்புகளைப் போலஅதைக் கண்டு கொள்ளக் கூடாது; எப்போதும் ,கொஞ்சம் தேநீர்கோப்பையில்மீந்திருக்க வேண்டும்.ஒரு தேநீரின் கடைசி மிடறுஇன்னொரு தேநீரின்முதல் மிடறுதான்என்பதை உணர்ந்தாக வேண்டும் ; ஓர் ஆழமான கலவிக்குப் பிறகுதலைகோதி விடுவதைப் போலதேநீர் பருகி முடித்த பிறகும்சில நொடிகள்கோப்பையைக்கையில் வைத்திருக்க வேண்டும்; நீ நினைப்பது சரிதான்.யாரையும்விளையாட்டாகவோஒப்புக்காகவோகடமைக்காகவோபழக்க தோஷத்திலோதேநீர் பருக அழைத்து விடக்கூடாது.ஒரு தேநீர் அழைப்புதேநீரோடு முடிந்து விடுவதில்லை… மானசீகன்