அடிக்கும்போதும் வராத அப்பா
‘அப்பனை முழுங்கின சனியன்’ என்றுபாட்டி திட்டும்போதெல்லாம்என் தோழிகளின் அப்பாக்களைநினைவு கூர்வேன்அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவைநான் எப்படி விழுங்க முடியும் என்றுபுரியாமல் விழித்துவிட்டுபாட்டியிடம் கேட்டிருக்கிறேன்சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டுசிலசமயம் அலுப்பதுண்டுசிலசமயம் என்னை அடித்துவிட்டுஅவளும் அழுவாள்ஆனால் நான் எப்போதும்அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்அப்பா என்று சொல்லி அழதே என்றுமேலும் அடித்திருக்கிறாள் பாட்டிஆனால் ஒருமுறைகூடஅப்பா வந்ததே இல்லை. பவித்ரா பாண்டியராஜூ