தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். […]

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ஐக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிவரும் தமிழ்நாடு அரசு, 4, 5 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வையே மாநில அளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது. திராவிட மாடல் அரசு என்றும் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம் என்றும் சொல்லிக்கொண்டே, புதிய கல்விக்கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இந்த நடவடிக்கை, கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வாசகர்களின் பார்வைக்கு: காலாண்டு தேர்வினையே பொதுத் தேர்வாக்கிக்கொண்டு 4,5 வகுப்புகளுக்கு மாநில அளவில் […]

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. […]