பாதி ஆப்பிள் விளைவு

பாதி ஆப்பிள் விளைவு

காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் […]

வன்மம் களைந்த மெய்

வன்மம் களைந்த மெய்

கவிதைகள் மயில் குட்டி ஒளியை உள் வாங்கியமகிழ்வுந்தின் கண்ணாடியொன்றுகம்பி மயிலுக்குக் கதவு திறந்திடஅது கருக்கொண்டுவெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது அது கண்டுசிறு திடலென மேடு கண்டதன் வயிற்றில் குறுகுறுத்தகுட்டி மயிலை விரல் பூசிவண்ணம் செய்கிறாள்தோகதவதி வன்மம் களைந்த மெய் மொழி தவிர்த்த துக்கம்சில உடைந்துவெளிக்கொணராமல் இருக்கஇறுகிய குரல்வளைகயிற்றை அறுத்தெறியதேவையாக ஒருகுளியலறை கிட்டியது பொதுபொதுவெனக் கொட்டியநீர் தாங்கிய குழாயினைத்திறக்கும் ஓசையில்அடித்துச் செல்லப்பட்டவிழி நீரும்உடைந்த வார்த்தைகளும்‘ஓ’வெனச் சிதறியமன இரைச்சலும் மறுசுழற்சி செய்த பின்ஒரு குளிர் தேகம்வெற்றுடலுடன் கடந்து வருகிறதுவன்மத்தை வாழைக்காய்ப் படகோட்டி வியாழக்கிழமைச் […]

மெழுகாய் உருகும் மனங்கள்

மெழுகாய் உருகும் மனங்கள்

தீக் கானல் பற்றிய நேர்காணல்                                                      விபத்துகள் நம்மை உலுக்கி எடுப்பவை. இயற்கைப் பேரிடர்களால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் மனிதத் தவறுகளால் நேரிடும் விபத்துகள் தரும் இழப்புகளும் வலிகளும் வாழ்நாள் வடுக்களாக மாறிவிடுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சமகாலத்தில் நாம் சந்தித்த கொடூரங்களில் ஒன்று. தீயில் சிக்கி 94 குழந்தைகள் பொசுங்கிப்போயினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்தத் தீ விபத்தில் உயிர்தப்பிய பெண் ஒருவருடனான நேர்காணல் இது. தற்செயலாக நடந்த […]

இரண்டாம் வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை உருபு

நூல் அறிமுகம் சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு நடுவர்கள் மற்றும் சங்கத்தின் இலக்கியப் பிரிவான பாட்டாபிறையின் முன்கள நிர்வாகிகள் பன்னிருவர் உதவியுடனும் தேர்தெடுக்கபட்ட சிறந்த இருபத்தெட்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இரண்டாம் வேற்றுமை உருபு. முதல் கதையே வாசகனை ஈர்த்து உள்ளுழுத்துக்கொள்கிறது. ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற கதையில் வருவது போன்ற துயரங்களும் சமூக அவலங்களும் நித்தமும் […]

மடிக்கனம்

மடிக்கனம்

மடிக்கனம் – கவிதை புழுதியை எழுதியெழுதிக்களைத்த பகல் கூடடைந்திருக்கவிழித்திருக்கிறதுநெடுஞ்சாலையின் இரவுவாடை மையொழுகும் விழிபொய்யொழுகும் இதழ்திட்டுத் திட்டாககோகுல் சாண்டலொழுகும் கன்னக்கதுப்பு புருவஞ்சுருக்கிக் கவனங்குவித்துபழக்கப்பட்ட லாரிக்காரனுக்காய்விழிநோக நிற்குமந்தக் கனகாவின்ஈரமொழுகும் ரவிக்கை வாடைக்குஇரவைக்கிழித்து ஊளையிடுகிறதுமுட்புதருக்குள் குட்டிகளைப் பதுக்கி வெளியேறும் மடிசரிந்த நாயொன்று குப்பையோரம் கிடந்த கொட்டாங்குச்சியில்தன் பாரம் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டுமேலும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்கிறாள் கனகா மடிகனத்த நெடுஞ்சாலைக் கிளிகளின் யாமம்விமோசனமில்லாப் பெருஞ்சாபம்

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா […]

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம் மல்லுகட்டிமல்லுகட்டிபதக்கம் வாங்கினார்கள்தேசம் கொடி அசைத்துக்குதூகலித்ததுபிரதமரோடு படம் எடுத்துமகிழ்ந்துகொண்டார்கள் மல்லுகட்டிமல்லுகட்டிகோரிக்கை வைத்தார்கள்மல்லுகட்டிமல்லுகட்டிமறுக்கிறது அதிகாரம் மல்லுகட்டிவாங்கிவந்த பதக்கங்கள்புறக்கணிப்போம் என்றாலும்மல்லுகட்டிப் பார்க்கிறதுஅதிகாரம் பல்லைக்காட்டிச் சிரிக்கிறதுசெங்கோல்

திருத்தமுடியாத தீர்ப்புகள்

திருத்தமுடியாத தீர்ப்புகள்

இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’  என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில்  மூச்சடைத்தது. “செந்திலண்ணா.. வாங்க..வாங்க..” என்றபடி கதவைத் திறந்தேன். “நல்லாருக்கியாம்மா.. பையன் எங்க காணும்..?” “டியூஷன் போயிருக்கான். அவரு வாறப்ப கூட்டிட்டு வருவாரு. எல்லோருஞ் சொகந்தானே..?” கேட்டுக்கொண்டே சமையலறையில் நுழைந்தவளிடம், “ஏம்மா.. எதுவும் வேண்டாம்.. இங்க வா.. ஒரு நல்ல சேதியோட வந்துருக்கேன்” என்றபடி கையில் வைத்திருந்த மஞ்சள் பையைப் பிரித்து, அழகான விநாயகர் ரூபம் பதித்த […]

பகையொன்றுமில்லை

பகையொன்றுமில்லை

பகையொன்றுமில்லை என் வால் பிடித்து வரும்வஞ்சனைகளை விரட்டவேண்டிக்கொண்டிருக்கையில்எலுமிச்சை தந்து அருள்வாக்களித்தகடவுளின் சொல்லை நம்பிபுலிக் கோடிட்ட பூனையின் கதையாய்பரிகாரம் பல செய்துகதவைத் தட்டும் அதிர்ஷ்ட தேவைதைக்காய்ஆரத்தித் தட்டுடன்கால்கடுக்கக் காத்திருந்தால்ஆசையைக் கொல்லென்றுசெவியில் அறைந்து சென்றான்புத்தன் சுயம் தெளிந்துஆசையைத் தூண்டியகடவுளைத் தேடினேன்எனக்கும் அவருக்குமிடையேபகையொன்றுமில்லைஆனாலும்தாடையைத் தோளில் இடித்துமுகத்தை வான்முட்டத் தூக்கிவைத்தபடிபொடிநடையாகச் சென்றவர்சன்னமாக மின்னிக்கொண்டிருக்கிறார்பல மில்லியன் ஒளியாண்டுகளுக்குஅப்பால்

சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும்

சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும்

சிறுபத்திரிகைகளா..! அதென்ன? சிறிய, பெரிய, நடுவாந்திரப் பத்திரிக்கைகள் என்று தனித்தனியே உள்ளனவா என்று உங்களில் சிலர் கேட்கலாம். உண்மையிலேயே middle magazines என்று அழைக்கப்பட்ட பத்திரிகைகள் உட்பட, பல விதமான வகைகளில் பத்திரிக்கைகள் வந்தன; வந்துகொண்டிருக்கின்றன. இந்த வகைப்படுத்தல் எவ்வாறு என்பது அந்தந்தப் பத்திரிகையின் ரீச்சபிலிட்டி, சர்க்குலேஷன் போன்ற பல சமாச்சாராங்களைப் பொறுத்தது. அவை தங்களுக்குள் சில சமயங்களில் குழுக்கள் சார்ந்தும் அரசியல் நம்பிக்கைகள் சார்ந்தும் வேறுபட்டன. உதாரணம் வேண்டுமெனில் விகடன், குமுதம் போன்றவை பெரியன என்றால், […]

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு […]